கண்ட அற்புதம் கேட்கவும் வேண்டுமே...திவ்ய பாசுரம்

கண்ட அற்புதம் கேட்கவும் வேண்டுமே...திவ்ய பாசுரம் "நான் கண்ட அற்புதத்தை கேட்பீர்..." என்கிறார் ஆழவார். அதாவது அவர் வர்ணனை செய்வதை நாம் கற்பனையில் கண்டு அவர் அனுபவித்ததை நாமும் அனுபவிக்க வேண்டும். "என் சொல் உன் அர்த்தம்" என்ற அளவில் பரஸ்பர தொடர்பு இருக்கும் வேளையில், தாம் அனுபவித்த்ததை படிப்போர் அனுபவிக்கும் விதம் எழுதுவது கடினமே. அதே போல் அந்த வர்ணனையின் ஸூக்ஷமங்களை இசையின் மூலம் வெளியிடுதலும் ஒரு சவாலே. அந்த சவாலை ஏற்று செவ்வனே பதில் தந்து இருக்கிறார் இளையராஜா. "புவியுள் நான்..." என்னும் இந்த பாசுரம் பெரியாழ்வார் திருமொழி 3.6 பதிகமாக அமைந்திருக்கிறது. இப்பதிகம் முழுவதும் கண்ணபிரான் குழலூதுவதின் சிறப்பை பெரியாழ்வார் பாடுகிறார். அதை உணர்ந்து தான் ராஜவும் இப்பாட்டில் புல்லாங்குழலை பெரும்பாலும் பயன்படுத்தியுள்ளார். இப்பாடலில் 7ஆம் பாசுரத்திலிருந்து 9ஆம் பாசுரம் வரை எடுக்கப்பட்டுள்ளது. முதல் ஆறு பாடல்கள் சிறப்பாக இருந்தாலும் இந்நான்கு பாடல்கள் மிகவும் சிறப்பு. ஏனென்றால் முதல் இரு பாசுரங்களில் ஆழ்வார் பொதுவாக கண்ணனின் குழலோசையை எப்பொழுதும் ரசிக்கும் கோப கோப...