amavasya tarpanam
அமாவாசை தர்பண மந்திரங்களின் தமிழ் அர்த்தம். ஸ்தல சுத்தி: - தர்பங்களை கையில் எடுத்துக்கொண்டு தர்ப்பணம் செய்யும் இடத்தை துடைக்க வேன்டும்.ப்ராசீனாவீதியுடன். பிறகு தர்பைகளை எறிந்து விட வேண்டும். அபே தவீதா விச ஸர்ப்ப தாதோ யேத்ரஸ்த புராணா யே ச நூதனா: அதாதி தம் யமோ வஸானம் ப்ருதிவ்யா அக்ரனிமம் பிதரோ லோகமஸ்மை. ஓ யம தூதர்களே நீங்கள் இங்கு யமன் உத்திரவினால் தங்கி இருக்கிறீர்கள் அல்லவா. வெகு காலம் இருப்பவரும் இப்போது வந்தவர்களுமான நீங்கள் இடத்தை விட்டு தாமே செல்லுங்கள். பித்ரு தர்ப்பணம் செய்யும் வரை எங்களுக்கு இந்த இடத்தை யமன் சொந்தமாக செய்திருக்கிறார். பித்ருக்களும் இந்த இடத்தில் வந்து தங்குவதற்கு தக்க இடம் என எங்களுக்கு தந்தனர். அபஹதா அஸுரா ரக்ஷாகும் ஸீ பிஶாசா யே க்ஷயந்தி ப்ரித்வீ மனு அன்யத்ரே தோ கச்சந்து யத்ரைஷாம் கதம் மன; என்று சொல்லி கருப்பு எள்ளை இந்த இடத்தில் கையை திருப்பி இறைக்கவும். இந்த இடத்தை அண்டி வசிக்கின்ற அஸுரர், ராக்ஷசர், பிஶாசர், முதலியவர் ---பித்ரு கர்மாவுக்கு விக்னம் செய்பவர்கள் --இந்த இடத்தை விட்டு அவர் மனம் எங்கு செல்கிறதோ அங்கு செல்லட்டும். உபவீதி--பூணல் வலம். தீர்த்தத்தால் ப...